12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 31-10-2023 01:46:18pm
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். நவம்பர் 3ஆம் தேதி 11 மாவட்டங்களிலும், நவம்பர் 4இல் 16 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 43% குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via