மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 10 வீடுகள், அதற்கு குறைவானவை, 3 மாடிகள், அதற்கு குறைவான லிஃப்ட் இல்லாத குடியிருப்புகளுக்கு அரசு சலுகை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் யூனிட் ரூ.8.15 இருந்து ரூ.5.50 காசுகளாக குறைக்கப்பட்டது. இந்த விலை கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Tags : மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.