கல்லூரி மாணவியை கொன்று எரித்த கணவன்?

by Editor / 20-12-2019 01:51:35pm
கல்லூரி மாணவியை கொன்று எரித்த கணவன்?

கொலை செய்தது ஏன் என்று கணவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்

கல்லூரி மாணவியை கொன்று எரித்த கணவன்?

விருதுநகர்

விருதுநகரில்  சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் பானுரேகா (20)  பானு ரேகாவின் தாய்மாமா ராஜ்குமார் (26) இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. 

பானு ரேகா விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் ராஜ்குமார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.

அதனால், பானுரேகா பெற்றோர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று கொண்டு வந்திருந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் பானு ரேகாவை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

போலீசார் கல்லூரி தோழியிடம் விசாரணை 

பானுரேகா தனது கணவருடன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என்று தோழி கூறினாள்.

போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி ரேகாவின் கணவரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டது.

இறுதியில் பானு ரேகாவை தான் தான் சமயபுரம் கோவிலுக்கு அழைத்து சென்றதாகவும் வரும் வழியில் விராலிமலை ஒரு தோட்டத்தில் வைத்து கொலை செய்து உடலை எரித்து தாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார் .

அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏன் எதற்காக பானுரேகா கொலை செய்தாய் என்று போலீசார் கேட்டதற்கு பானு ரேகாவுக்கு உடல்நிலை சரி இல்லை அதனால் அவர் தன்னுடன் முறையாக குடும்பம் நடத்த ஒத்துழைக்க வில்லை இதனால் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று, எரித்து விட்டேன் என்று கூறினார்

 

Share via