பைக் மீது மோதிய கார்.. தந்தை மகள் பலி

by Staff / 06-11-2023 12:28:55pm
பைக் மீது மோதிய கார்.. தந்தை மகள் பலி

குஜராத் மாநிலத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் போர்சாத் நகரின் தாவோல் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தம்பதியினர் தங்கள் இரு மகள்களுடன் பைக்கில் சென்றுள்ளனர். அதே சமயம் வேகமாக வந்த கார் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாயும் மற்றொரு மகளும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via