தங்கம் வென்ற மதுரை மாணவர்

by Staff / 06-11-2023 01:54:08pm
தங்கம் வென்ற மதுரை மாணவர்

சி. பி. எஸ். இ. , பள்ளிகளுக்கு இடையேயான மாநில தடகளப் போட்டிகள் சென்னையில் நடந்தன. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் பள்ளிகளில் இருந்து 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் மதுரை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி பிளஸ் 2 மாணவர் ஹரீஸ்குமார் ஈட்டி எறிதலில் 47. 34 மீட்டர் துாரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இதன் மூலம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடக்கவுள்ள தேசிய ஈட்டி எறிதல் போட்டிக்கு தகுதி பெற்றார். தங்கம் வென்ற மாணவரை பள்ளித் தாளாளர் துரைசாமி, முதல்வர் சுந்தராம்பாள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

 

Tags :

Share via