சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகும் விஜய்யின் மாஸ்டர்

by Editor / 01-01-2020 10:58:59am
சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகும் விஜய்யின் மாஸ்டர்

புத்தாண்டை முன்னிட்டு விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் புத்தாண்டின் விருந்தாக விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

   விஜய்யுடன் முதன் முறையாக கைகோர்க்கும் விஜய் சேதுபதி ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்

விஜய்யின் 64வது படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியலோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய்யுடன் முதன் முறையாக கைகோர்க்கும் விஜய் சேதுபதி ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இதுநாள் வரை பெயர் வைக்காமல் படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில். இப்போது ‛மாஸ்டர் என பெயரிட்டு, படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 2020, ஏப்ரலில் வெளியிடுவதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் நடிக்கிறார். அதனாலேயே படத்திற்கு இப்படியொரு தலைப்பை சூட்டி உள்ளனர்

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்குகிறது.

 

 

Share via