சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

by Editor / 16-11-2023 09:55:11am
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மண்ணடி உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் தொழிலதிபர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கொச்சி மற்றும் பெங்களூருவை சேர்ந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

சென்னை ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் இரு மாநிலங்களை சேர்ந்த ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

Share via