செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 16-11-2023 11:52:45am
செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு, சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பாக மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அனுமதி பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via