சைனீஸ் சிக்கன் நூடில்ஸ் எப்படி செய்வது?

by Admin / 29-07-2021 04:12:56pm
சைனீஸ் சிக்கன் நூடில்ஸ் எப்படி செய்வது?

 

தேவை

அவித்து வடிகட்டிய நூடில்ஸ் – 8 அவுன்ஸ்

காரட் வெட்டியது – 1 கப்

சோயா பீன்ஸ் – 1 தேக்கரண்டி

சமைத்து சிறு துண்டுகளாக வெட்டிய கோழி – 1 1/2 கப்

வெட்டிய கோழி

அவித்த கோழி அல்லது

ஸ்டாக் கேப்சிகம்

பச்சை பீன்ஸ் – 1 கப்

கார்ன் பிளவர் அல்லது

மைதா – 2 தேக்கரண்டி

கோஸ் நீளமாக வெட்டியது, உப்பு, மிளகுத்தூள் பெல்லாரி நீளமாக வெட்டியது.

செய்முறை

       அவித்து வடிகட்டிய நூடில்ஸ் உடன் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். ஒரு கையளவு நூடில்ஸை எண்ணெயில் ப்ரவுன் செய்து அலங்கரிக்கத் தனியே எடுத்து வைக்கவும். இரண்டு கரண்டு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி நீளமாக தீக்குச்சி போன்ற அரிந்து வைத்திருக்கும் காய்கறிகளையும், வதக்கவும். சிறு தீயில் தன் தண்ணீரிலேயே வெந்து விடும். உப்பு மிளகுத்தூள், உரித்த கோழித்துண்டுகள் சேர்த்து ஸ்டாக்கில் கார்ன்பிளவர் கலந்து காய்கறிகளுடன் சேர்த்து, நூடில்சையும் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும். சோயா பீன்ஸ் ஊற்றி பரிமாறவும்.

 

Tags :

Share via