கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததால் 13 கடைகளுக்கு அபராதம்

by Admin / 29-07-2021 04:28:03pm
கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததால் 13 கடைகளுக்கு அபராதம்



விழுப்புரத்தில் 12 நகைக்கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் குளிர்சாதன வசதியை பயன்படுத்தியது தெரியவந்தது.

விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்று நேற்று விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், தேர்தல் துணை தாசில்தார் வெங்கட்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 
அப்போது 12 நகைக்கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் குளிர்சாதன வசதியை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் அந்த கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 12 நகைக்கடைகளுக்கும் தலா ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல் கொரோனா பாதுகாப்பு விதியை பின்பற்றாத ஒரு ஜவுளிக்கடைக்கு ரூ.5 ஆயிரத்தை அபராதமாக அதிகாரிகள் விதித்தனர்.

 

 

Tags :

Share via