திமுக அரசின் விவசாய தனி பட்ஜெட் ஜீரோ தான் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை - சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.

by Admin / 25-11-2023 10:24:04am
திமுக அரசின் விவசாய தனி பட்ஜெட் ஜீரோ தான் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை - சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.

திமுக அரசின் விவசாய தனி பட்ஜெட் ஜீரோ தான் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழை காரணமாக கோவில்பட்டி அருகே கழுகுமலை சுற்று வட்டார கிராம பகுதிகளில் நேற்று பகுதிகளில் நேற்று பெய்த நேற்று பெய்த கன மழையினால் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்தன கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியான உசிலங்குளம் கிராமத்தில் கம்மாய் உடைந்து ஊருக்குள் மழைநீர் கண்ணீர் புகுந்தது ஊர் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதைக்கண்டு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் தொலைபேசி மூலமாக கழுகுமலை சுற்று வட்டார கிராம பகுதிகள் மற்றும் உசிலங்குளம் கிராமத்தில் நேற்று பெய்த மழையினால் சேதமடைந்த  இடத்திற்கும் மக்காச்சோள பயிர் இன்சூரன்ஸ் உடனே வழங்க கோரி  கோரிக்கை வைத்தனர். இதில் கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ்,எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் ஆசூர் காளி பாண்டியன், தகவல் தொழில்நுட்பு பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன்,மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி,அதிமுக நிர்வாகிகள் கதர்ஸ்டோர் ராமசுப்பு,கேண்டின் நைனா, கோபி, முருகன்,மாரியப்பன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் கூறுகையில் :

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் மாணவரி விவசாய நடைபெறுகிறது இங்கு மக்காச்சோளம் உழுந்து உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இயற்கை 

சீற்றங்கள் போது விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயிர் காப்பீடு திட்டத்தில்

410 கோடி ரூபாய் நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தார். நேற்று முன் தினம் பெய்த மழையின் காரணமாக கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை சுற்றுவட்டார பகுதியில் மக்காச்சோளம் 

பயிர் சேதம் அடைந்துள்ளது இதேபோல் காட்டுப் பன்றிகளும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது இதை  மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை கடந்தாண்டு வில்லிச்சேரி பகுதியில்

பெய்த மழையினால் பயிர்கள் சேதம் அடைந்தது அதனை நான் சென்று பார்வையிட்டேன் பின்னர் அமைச்சர் எம் பி கனிமொழி ஆகியோர் வந்து பார்வையிட்டனர் ஆனால் எந்த நிவாரணம் வழங்கப்படவில்லை. 

நேற்று முன்தினம் பெய்த மழையில் கயத்தார் அருகே உசிலங்குளம் கிராமத்தில் கண்மாய் உடைந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது மேலும்  விளைநிலங்களில் நீர் புகுந்துள்ளது இதற்கு காரணம் குடிமராமத்து பணி செய்யாததால் தான் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் இவர்கள் செய்யாததால் இப்பொழுது கண்மாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது மேலும் சேதங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர் தமிழக அரசுக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இப்பகுதி விவசாயிகளுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ஊத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமராபுரம் காலனி பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவல்  இடிந்ததால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர் மறுத்து வருகின்றனர் இதுகுறித்து நானும் நேரடியாக சென்று ஆய்வு செய்து பின்னர் இதுகுறித்து துறை அமைச்சரிடம் மாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க எடுத்துறைத்தேன்

 இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களுடன்  இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிக் கொள்கிறேன் என்றனர்.

திமுக அரசு விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட்  கொண்டு வந்திருக்கிறார்கள்

தவிர அதனுடைய நடைமுறை என்பது ஜீரோ தான் கடந்த ஆட்சி காலத்தில் இருந்தது போல தான் தற்போதும் விவசாய இருக்கிறது தனி பட்ஜெட்டை தான் போடுகிறார்கள் நிதி ஒதுக்கிருக்கிறார்களே தவிர வேறு எதுவும் இதுவும் நடக்கவில்லை இரண்டு ஆண்டு ஆட்சியில் தனி பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்கி என்னென்ன பணிகள் செய்துள்ளார்கள் என்பதை வெள்ளை அறிக்கை  வெளியிட வேண்டும் இது கண்துடைப்பு செயல் இதுவரை தனி வேளாண் பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை யாரும் பயன்பெறவில்லை இது கண்டு துடைப்புக்காகவே  நடத்தப்படுகிறது.

திமுக அரசின் விவசாய தனி பட்ஜெட் ஜீரோ தான் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை - சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.
 

Tags :

Share via