புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

by Staff / 02-12-2023 01:06:37pm
புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் வரும் 4ஆம் தேதி (திங்கள்கிழமை) கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உயர்க்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து உயர்க்கல்வித்துறை அதிகாரி மோகன சௌந்தரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via