நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Staff / 05-12-2023 12:41:00pm
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட பொதுவிடுமுறை வழங்கப்பட்டது.
இந்தநிலையில், பல இடங்களில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 6ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via