ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்..

by Staff / 07-12-2023 05:26:00pm
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்..

ஹஜ்-2024-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கும் முறை 4-ந் தேதி ஆன்லைனில் தொடங்கி வருகிற 20-ந்தேதியுடன் முடிவடைகிறது.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www. hajcommittee. gov. in என்ற இணையம் வழியாக (அல்லது) "HAJ SUVIDHA" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.

ஹஜ் 2024-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம்.வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் 31. 01. 2025 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு, ஹஜ் 2024-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https: //www. hajcommittee. gov. in/ மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via