ஜெமினி அல்ட்ரா.-கூகுள், புதிதாக ஏ. ஐ மாடல், மிகவும் மேம்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியுள்ளது .

by Admin / 08-12-2023 12:22:09am
 ஜெமினி அல்ட்ரா.-கூகுள், புதிதாக ஏ. ஐ மாடல், மிகவும் மேம்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியுள்ளது .

கூகுள் நிறுவனம், இப்பொழுது புதிதாக ஏ. ஐ மாடல் மிகவும் மேம்பட்ட ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது .அதுதான் ஜெமினி அல்ட்ரா. இது சில சோதனைகளில் மனித ஆற்றலை விட- மனித அறிவை விட மிக சிறப்பாக செயல்படக்கூடியது . இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உலகில் ஒரு அதிரடி பாய்ச்சலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கூகுள் ஜெமினி என்கிற இந்த மென்பொருள் மொழி மாடலை அறிமுகப்படுத்தியதன் மூலம் கூகுள் இந்த மென்பொருளை சக்தி வாய்ந்தது- திறன் பெற்றது- ஆற்றல் மிக்கது என்று சொல்லி அதற்கான கட்டணத்தை நிர்ணித்து உள்ளது .கூகுளின் இந்த ஏ .ஐ சிலிக்கன் சில்லுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஜெமினி வீடியோ ,உரை, படம் மற்றும் ஆடியோ மூலங்களிலிருந்து தகவல்களை செயலாக்க ப்படுத்தி தர முடியும் என்பதோடு சிக்கலான அறிவு சார் நுணுக்கங்களையும் புரிந்து அதற்கான செயலாக்கத்தை தரும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். ஓபன் ஏ. ஐ உள்ளிட்ட போட்டியாளர்களோடு போட்டியிடக்கூடிய ஏ. ஐ நிறுவன வெளியீடுகளை இதன் மூலம் கூகுள் விரைவுபடுத்தி உள்ளது. பார்ட் என்று அழைக்கப்படுகிற ஏ.இ அமைப்பின் மூன்று அடுக்குகளில் ஒன்றாக ஜெமினி இயக்கப்படுகிறது.. இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஷாட் போட்டு காண மிகப்பெரிய மேம்படுத்துதல் என்று கூகுள் நிறுவனம் இதை விவரிக்கின்றது. நிறுவனத்தின் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் ஜெமினி நானோவைவை இயக்கக்கூடிய ஆற்றல் உடையவை. இது ஆண்ட்ராய்டு டெவலப்பர் களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. ஜெமினி அல்ட்ரா அடுத்த ஆண்டு டெவலப்ர்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

 ஜெமினி அல்ட்ரா.-கூகுள், புதிதாக ஏ. ஐ மாடல், மிகவும் மேம்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியுள்ளது .
 

Tags :

Share via