தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

by Admin / 10-12-2023 12:58:28am
 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

 நிஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட முக்கிய உதவிகளை வழங்கிட வேண்டி தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. கடிதத்தில்,

 அண்மையில் ஏற்பட்ட மிக்சாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

. இம் மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4800 குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரும் மழையினால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானது மட்டுமல்லாமல் மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது.

இந்த நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம் என்பதனை  தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளதோடு மாநில அரசு மின்வினியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்துள்ள போதும் இந் நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியை துவங்க சிறிது காலம் தேவைப்படும் என்பதால் பாதிக்கப்பட்ட குழு சிறு மற்றும் நடுத்தர துறையின் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றி அமைத்திடவும் கூடுதல் மிகைப்பற்று வசதியினை வழங்கிடவும் கூடுதல் நடைமுறை மூலதனக் கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்தவும் காப்பீட்டுத் தொகையை காலதாமதம் இன்றி மதிப்பீடு செய்து உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்திடவும் கேட்டுக் கொண்டுள்ளார்..

 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்
 

Tags :

Share via