மதுரை வழியாக காசிக்கு வாராந்திர ரயில் சேவை துவக்கம்

by Editor / 17-12-2023 12:19:35pm
மதுரை வழியாக காசிக்கு வாராந்திர ரயில் சேவை துவக்கம்

கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக காசிக்கு ஒரு வாராந்திர ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) முதல் துவக்கப்பட உள்ளது. . இந்த  சிறப்பு ரயிலை (06367)  ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வழியாக துவக்கி வைக்கிறார்.. சிறப்பு ரயிலை வரவேற்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணிக்கு நடைபெற உள்ளது.  இந் நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் நல சங்கத்தினர்,பொதுமக்கள்,, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 இந்த  விரைவு ரயில் சேவை  (16368) டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை பனாரசிலிருந்து கன்னியாகுமரிக்கு  இயக்கப்பட இருக்கிறது..

மறு மார்க்கத்தில் டிசம்பர் 28 வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரியில் இருந்து பனாரஸ்- காசி எக்ஸ்பிரஸ் (16367) சேவை துவங்க உள்ளது. இந்த வழக்கமான வாராந்திர ரயில் மதுரை கோட்ட பகுதியில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான பயணச் சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது.

 

Tags : மதுரை வழியாக காசிக்கு வாராந்திர ரயில் சேவை துவக்கம்

Share via