விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த, மியாட் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு கடந்த 11 ஆம்தேதி வீடு திரும்பிய நிலையில், விஜயகாந்த் மீண்டும் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் நாளை மறுநாள் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags : மியாட் மருத்துவமனையில் அனுமதி