2 மகள்களுடன் பிரபல நடிகர் பலி

by Staff / 06-01-2024 11:45:52am
2 மகள்களுடன் பிரபல நடிகர் பலி

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் (வயது 51). ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரின் மனைவி ஜெசிகா, இந்த தம்பதிக்கு அகிக் (வயது 10), மடிடா லிப்சர் (வயது 12) என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கரீபியன் தீவுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இவர், தனது 2 மகள்களுடன் சிறிய ரக தனி விமானம் மூலம் பிக்யுயா தீவில் இருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கி புறப்பட்டார். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நடிகர் கிறிஸ்டின், மகள்கள் அகிக், மடிடா லிப்சர், விமானி ராபர்ட் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via