நடுவானில் காற்றில் பறந்த விமான கதவு

by Staff / 06-01-2024 01:19:18pm
நடுவானில் காற்றில் பறந்த விமான கதவு

அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்றில் அதன் கதவு அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கதவு காற்றில் அடித்து செல்லப்பட்ட பின்னர் விமான பயணி ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விமானத்தின் கதவு முற்றிலுமாக இல்லாமல் பயணிகள் அனைவரும் மரணபயத்தில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via