மக்களவை தேர்தல்.. பல மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்

by Staff / 09-01-2024 11:19:10am
மக்களவை தேர்தல்.. பல மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்


மக்களவை தேர்தலை இலக்காக கொண்டு அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொள்வார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த மாதம் ஆறு மாநிலங்களுக்கு செல்கிறார். அதிக தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலங்களில், பிரதமர் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வார். இந்த ஆண்டின் முதல் பயணமாக பிரதமர் மோடி, தமிழகத்திற்கு கடந்த வாரம் வருகை தந்தார். தொடர்ந்து, கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக மகளிர் மாநாடு, ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

 

Tags :

Share via