ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி பங்குச்சந்தைகள் கடும் சரிவு

by Editor / 13-11-2018
ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி பங்குச்சந்தைகள் கடும் சரிவு

மும்பை: பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 345 புள்ளிசரிந்தது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தைகளி–்ல் கடும் சரிவு காணப்பட்டது. காலையில் சரிவுடன் தொடங்கிய சந்தை 11 மணிக்கு மேல் சற்று ஏற்றம் கண்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே மீண்டும் சரிவை நோக்கி சென்றது. மாலை வர்த்தகம் முடிவதற்கு முன்பு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34,770.98 புள்ளிகளாக சரிந்தது. கடைசி 5 நிமிடத்தில் 334,812.99 ஆக இருந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையை விட 345.56 புள்ளிகள் சரிந்தது. டாடா ஸ்டீல், கோடக் மகிந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ், எல் அண்ட் டி தவிர பிற பங்குகள் 4.66 சதவீதம் வரை சரிந்தன. தேசிய பங்குச்சந்தை காலையில் ஏற்றம் கண்டது. ஆனால் சிறிது நேரம் கூட இது நீடிக்கவில்லை. மதியம் வரை ஏற்ற இறக்கம் காணப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு மேல் கிடுகிடுவென சரிய தொடங்கியது. வர்த்தக முடிவில் நிப்டி 103 புள்ளி சரிந்து ₹10482.20ஆக இருந்தது. ஐடி பங்குகள் தவிர பிற பங்குகளின் மதிப்புகள் 2.44 சதவீதம் வரை சரிந்தன. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 5 மாநில தேர்தல்கள். ரூபாய் மதிப்பு சரிவு. கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவை பங்குச்சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 73 ரூபாய்க்கு கீழ் சரிந்தது. வர்த்தக முடிவில் 39 காசு சரிந்து ₹72.89ஆக இருந்தது.

Share via