வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏக்களும் ஒத்துப்போகவில்லை

by Staff / 23-01-2024 02:58:15pm
வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏக்களும் ஒத்துப்போகவில்லை

வேங்கைவயல் மனிதக் கழிவு விவகாரத்தில், 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்துள்ளது.4 சிறுவர்கள் உள்பட 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் நான்கு கட்டங்களாக சோதனைக்கு எடுக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள தடயவியல் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன், 31 பேரின் டிஎன்ஏக்களும் ஒத்துப்போகவில்லை என்று தெரிய வந்திருப்பதன் மூலம், வழக்கில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via