சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் - இபிஎஸ் வாழ்த்து

by Staff / 26-01-2024 01:06:43pm
சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் - இபிஎஸ் வாழ்த்து

ஜனநாயகத்தின் தாயகம் என்று சிறப்பிக்கப்படும், உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் நம் இந்திய திருநாட்டின் அரசியலமைப்பு சாசனம் நிறைவேற்றப்பட்ட இந்நன்னாளில் பொதுமக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், அரசியல் அமைப்புச் சாசனத்தின் அடிப்படை வேர்களான இன வேறுபாடற்ற மதச்சார்பற்ற சமுகமும், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்கவும், அமைதி, வளம், வளர்ச்சி ஓங்கப்பெற்று நாடு செழிக்கவும், நாட்டின் உயரிய வளர்ச்சிக்கும் அயராது பாடுபடுவோம் என உறுதியேற்பதுடன், அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via