தூத்துக்குடி மாவட்டபகுதியில் காற்றின் தாக்கம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி சரிந்தது.

by Editor / 03-02-2024 08:25:34am
தூத்துக்குடி மாவட்டபகுதியில் காற்றின் தாக்கம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி சரிந்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், கடம்பூர்,கயத்தார், தெற்கு கோனார் கோட்டை, அய்யனார் ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காற்றாலை மூலமாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 30 முதல் 40 சதவீதம் இப்பகுதியில் இருந்து பெறப்படுகிறது. தமிழக மின் உற்பத்தி அமைப்புகள் மூலமாக மொத்தம் 18, 489 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.

தற்போது காற்றின்வேகம் குறைந்து விட்டதால் காற்றாலை  மின் உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.  வாட்டாகவும் அதிகரித்துள்ளது. வழக்கமாக 100 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அது பாதி அளவாக குறைந்துள்ளது.

காற்றின்  வேகம் சீராக இல்லாமல் குறைந்து கொண்டே வருவதால் காற்றாலை மின் உற்பத்தி சரிவினை சந்தித்து உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் மின் நுகர்வு 16, 924 மெகா வாட்டாக இருந்த காற்றாலையின் உற்பத்தி நேற்று 16,888 மெகா வாட்டாக சரிந்தது.
 

 

Tags : காற்றாலை மின் உற்பத்தி சரிந்தது.

Share via