பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று

by Editor / 03-02-2024 08:16:38am
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சென்னையில் இன்று திமுக  சார்பில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். நினைவிடத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அண்ணா திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் பல கட்சித்தலைவர்கள்,நிர்வாகிகள் நாடெங்கிலும் உள்ள அண்ணாவின் சிலைகளுக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
 

 

Tags : பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று

Share via