காதலர் தினம்: திருமா வாழ்த்து

by Staff / 14-02-2024 11:20:10am
காதலர் தினம்: திருமா வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கவிதை ஒன்றை பதிவிட்டு, விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்கத்தில் சிறுவனைக் கொஞ்சும் புகைப்படத்துடன், 'அன்பின் பெருக்கம் அருள். அன்பின் பேராழம் காதல். காதல் ஓய்வதில்லை. காதல் முறிவதில்லை. காதல் வீழ்வதில்லை. காதல் சாவதில்லை. காதல் பொய்ப்பதில்லை. ஆதலால், காதலர் தோற்பதில்லை' என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via