டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் அதிகரிப்பு

by Professor / 13-11-2018
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் அதிகரிப்பு

மும்பை: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 29 காசுகள் அதிகரித்துள்ளது.

திங்கள் கிழமை அன்று பங்குச்சந்தை முடிவின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் வீழ்ச்சி அடைந்து 72 ரூபாய் 89 காசுகளாக இருந்தது. இன்று வர்த்தகம் தொடங்கியதும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 60 காசுகளாக இருந்தது. அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரிப்ப சர்வதேச அளவில் சில நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் வீழ்ச்சி ஆகியவை இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Share via