11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்.

by Editor / 03-03-2024 10:45:50pm
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்.

தமிழகத்தில் நாளை முதல் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வினை 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர 5000 தனித் தேர்வர்களும் 187 சிறைவாசிகளும் தேர்வு எழுதவுள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 300 தேர்வு மையங்களில் மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கவுள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு அனுமதி இல்லை.

 

Tags : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

Share via