4 முனைப்போட்டிக்குத்தயாராகும் தமிழகம்.

by Editor / 03-03-2024 10:48:11pm
4 முனைப்போட்டிக்குத்தயாராகும் தமிழகம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் நிறுவனத்தலைவர் சீமான் இடையிடையே அறிவித்துவருகிறார்.

திமுக கூட்டணியில் இன்னும் கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகள் உறுதி செய்யப்படவில்லை.ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

அஇஅதிமுக தரப்பில் பாமகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை முதலில் துவங்கினாலும் சும்மாசந்திப்பு என்ற கணக்கில் ஆரம்பித்தது..ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பங்கீடு வரை வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உத்தேச  தொகுதிகளும் சமூக வலைத்தளங்களில் உலாவரத்தொடங்கியுள்ளன.
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - மயிலாடுதுறை 

புரட்சி பாரதம் - திருவள்ளூர் 

எஸ்டிபிஐ - மத்திய சென்னை, 

சமத்துவ மக்கள் கட்சி - திருநெல்வேலி 

புதிய தமிழகம் - தென்காசி 


பாமக - 6,தேமுதிக - 4,-25 இடங்களில் அஇஅதிமுக நேரடி போட்டி என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பாட்டாலும் பாஜகவினர் தமிழக பட்டியலை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.ஆக மொத்தத்தில் 4 அணிகள் நாடாளுமன்றத்தேர்தலில் களம்  காண இருக்கிறது.

 

Tags : 4 முனைப்போட்டிக்குத்தயாராகும் தமிழகம்.

Share via