வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 9-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம்

by Admin / 04-08-2021 03:15:00pm
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 9-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம்



   
கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி நாடு தழுவிய அளவில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

உடுமலை நகர செயலாளர் பாலதண்டபாணி முன்னிலை வகித்தார். கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், உன்னிகிருஷ்ணன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும், பொதுத்துறைகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கண்டிப்பது,100 நாட்கள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக அதிகரிப்பதுடன் கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி நாடு தழுவிய அளவில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இதையட்டி அன்று மாலை 4 மணிக்கு உடுமலை மத்திய பஸ்நிலையம் முன்பு சி.ஐ.டி.யு., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திரளானோர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவில் மடத்துக்குளம் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

 

 

Tags :

Share via