உதயநிதியை ட்ரக் உதயநிதி என அழைக்கலாமா? -வானதி சீனிவாசன்
கோவை சித்தா புதூர் பகுதியில் பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் கோவை வருகை கட்சியினர் மட்டுமின்றி மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் ‘ரோட் ஷோ’ பிரம்மாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பிரதமர் மோடியை 28 பைசா என்று அழைக்க வேண்டுமென உதயநிதி கூறியுள்ளார். ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த உதயநிதியை ட்ரக் உதயநிதி என்று அழைக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாங்க தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்லர்.. ஆனால், பிரதமர் மோடியை விமர்சித்தால் தக்க பதிலடி கொடுப்போமென்று கூறியுள்ளார்.
Tags : உதயநிதியை ட்ரக் உதயநிதி என அழைக்கலாமா? -வானதி சீனிவாசன்