பாஜக ரூ.7000 கோடி பெற்றது உறுதி

by Staff / 17-03-2024 04:26:04pm
பாஜக ரூ.7000 கோடி பெற்றது உறுதி

தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் ரூ.7000 கோடி பெற்றுள்ளதாக கடந்த நவம்பரில் தேர்தல் ஆணையத்திடம் பாஜக தெரிவித்துள்ளது. 2018 மார்ச் மாதம் மட்டும் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.210 கோடி கிடைத்துள்ளது. 2018 - 2019 நிதியாண்டில் பாஜகவிற்கு ரூ.1,451 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. 2019 - 2020 நிதியாண்டில் ரூ. 2,555 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. 2020 - 21 நிதியாண்டில் ரூ.22.38 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 2021 - 22 நிதியாண்டில் பாஜக ரூ. 1,033 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 2022 - 23 நிதியாண்டில் ரூ. 1,249 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 2023 - 2024 தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.420 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via