எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக  கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து-  உற்பத்தி நிறுத்தம்.

by Admin / 20-03-2024 11:36:31am
எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக  கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து-  உற்பத்தி நிறுத்தம்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன்,  கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் ஆகியோர்,  கோவில்பட்டி பகுதிகளில் உள்ள உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கோவில்பட்டி விஎம்எஸ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெயா ஸ்வீட்ஸ் கடலைமிட்டாய், மிக்சர் மிட்டாய் மற்றும் எள் மிட்டாய் தயாரிக்கும் கம்பெனியை ஆய்வு செய்ததில்,   மிகவும் சுகாதாரக்கேடுடனும், உரிய கணக்குக்கள் மற்றும் பகுப்பாய்வறிக்கைகள் எதுவுமில்லாமலும் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அங்கு எலியின் எச்சங்கள் படர்ந்திருந்த 840 கிலோ கிழங்கு மாவு, பட்டாணி மாவு மற்றும் மைதா மாவு கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உரிய லேபிள் இல்லாத காரணத்தினால் 

100 கிராம் எடையுள்ள 5 ஆயிரம் மிக்சர் மிட்டாய் பாக்கெட்டுகள், 800 கடலைமிட்டாய் பாக்கெட்டுகளும்  பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 

கடலை மிட்டாய் தயாரிப்பு கம்பெனியின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்தும், அந்நிறுவனத்தின் உற்பத்தியை உடனடியாக நிறுத்தி வைத்தும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் உத்திரவிட்டுள்ளார்.

எலி எச்சங்களுடன் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதாக  கடலைமிட்டாய் ஆலையின் உரிமம் ரத்து-  உற்பத்தி நிறுத்தம்.
 

Tags :

Share via