ஐபிஎல் 2 ஆவது நாள் ஆட்டம் - டாஸ் வென்ற பஞ்சாப்

by Staff / 23-03-2024 03:48:18pm
ஐபிஎல் 2 ஆவது நாள் ஆட்டம் - டாஸ் வென்ற பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நேற்று(மார்ச்23) சென்னையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரில் 2வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று(மார்ச் 23) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சண்டிகரில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via