அதிமுக கூட்டணியானது கொள்கை கூட்டணி இது கொள்ளையடிக்கும் கூட்டணி அல்ல - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி. 

by Editor / 26-03-2024 09:29:24am
அதிமுக கூட்டணியானது கொள்கை கூட்டணி இது கொள்ளையடிக்கும் கூட்டணி அல்ல - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி. 

அதிமுக கூட்டணியானது கொள்கை கூட்டணி இது கொள்ளையடிக்கும் கூட்டணி அல்ல - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி. 

அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில், தென்காசி நகரப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சி, எஸ்.டி.பி. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட பல்வேறு முக்கிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

 முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும் போது, தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி வெற்றி பெறுவது உறுதி எனவும், தமிழகத்தில் தற்போது இருமுனை போட்டியே நிலவி வருவதாகவும், எப்பொழுதுமே அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் தமிழகத்தில் போட்டி எனவும் தெரிவித்தார்.

 தொடர்ந்து, பேசிய அவர் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் எனவும் அதிமுக தலைமையில் தற்போது அமைந்துள்ள கூட்டணியானது கொள்கை கூட்டணி எனவும் இது கொள்ளையடிக்கும் கூட்டணி அல்ல எனவும் அவர் பேசினார்.

 

Tags : அதிமுக கூட்டணியானது கொள்கை கூட்டணி இது கொள்ளையடிக்கும் கூட்டணி அல்ல - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி. 

Share via