ஓபிஎஸ் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

by Staff / 29-03-2024 03:18:11pm
  ஓபிஎஸ் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேம்புமனுவின் மூலம் அவரின் சொத்துமதிப்பு தெரியவந்துள்ளது. அதன்படி, தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1 கோடியே 11 லட்சத்து 33 ஆயிரத்து 138, அசையா சொத்துகள் ரூ.7 கோடியே 80 லட்சத்து 99 ஆயிரத்து 707, தனது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 694 மற்றும் அசையா சொத்துகள் ரூ.76 ஆயிரத்து 99 ஆயிரத்து 838 என மொத்தம் ரூ.9 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரத்து 377 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via