5 நாள்களாக பிரச்சாரத்திற்கு செல்லாத மோடி

by Staff / 29-03-2024 03:31:59pm
5 நாள்களாக பிரச்சாரத்திற்கு செல்லாத மோடி

பூட்டான் நாட்டுக்கு சென்று 23-ம் தேதி நாடு திரும்பிய பிரதமர் மோடி, சமூக ஊடகக் கணக்குகளில் மட்டும் பதிவு செய்து வருகிறார். முதல் கட்ட மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் கடந்த 5 நாள்களாக எங்கும் பிரச்சாரம் செய்ய செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாக அடிக்கடி தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வந்தார்.

 

Tags :

Share via