33 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை.. காஸா நிலவரம்

by Staff / 04-04-2024 04:23:27pm
33 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை.. காஸா நிலவரம்

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,037 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் 75,668 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு 62 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 91 பேர் காயமுற்று சிகிச்சைக்கு வந்துள்ளனர். நேற்று(ஏப்ரல் 4) ராபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via