எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் பெட்டி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு.

by Editor / 04-04-2024 11:07:21pm
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் பெட்டி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு.

எர்ணாகுளத்திலிருந்து கொல்லம் புனலூர் தென்காசி விருதுநகர் மானாமதுரை காரைக்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக இயக்கப்பட்டு வரும் வண்டி எண் 16361 /16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் சேவையின் பெட்டிகள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து 06-04-2024 (சனிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது.   செங்கோட்டை - புனலூர் வழித்தடத்தில் பெட்டிகள் அதிகரிக்க ஒப்புதல் கிடைத்த பின்னர் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் முதல் சேவையாக அமைந்துள்ளது.   Coach Position  Two tier     AC. 1 Three tier.  AC. 4 Sleeper.             9 GS.                     2 SLRD                 2  TOTAL 18 COACHES.   பயண தேவையுடையோர் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.   *குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறோம்என ரயில் பயணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Tags : எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் பெட்டி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு.

Share via