எஸ்.எஸ்.எல்.சி தேர்வு ஜூன் 1ம் தேதி தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு

by Editor / 13-05-2020 10:25:28am
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு ஜூன் 1ம் தேதி தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு ஜூன் 1ம் தேதி தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு பிளஸ் -1 தேர்வு 2ம் தேதி நடக்கிறது .

 

 

சென்னை

​​​​​கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால்,  தமிழகத்தில் மார்ச் மாதம் 27ஆம் தேதி தொடங்கிய நடைபெற இருந்த எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த பிளஸ்-1 தேர்வின் இறுதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக அரசு அறிவித்தது .
வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நடைபெறும இல்லை ரத்து செய்யப்படும் என குழப்பங்கள் நிலவிய நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
தற்போது தேர்வுக்கான தேதிகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது .
 

தேர்வு தேதிகள்

ஜூன் மாதம் 1 தேதி திங்கட்கிழமை- மொழிப்பாடம் 3 தேதி புதன்கிழமை ஆங்கிலம் 5 தேதி வெள்ளிக்கிழமை- கணிதம் 6ம் தேதி சனிக்கிழமை - விருப்பமொழிப் பாடம் 8ம் தேதி திங்கட்கிழமை - அறிவியல் 10ம் தேதி- சமூக அறிவியல் 12ஆம் தேதி - தொழிற்பாடம்
பிளஸ்-1 இறுதித் தேர்வு ஜூன் இரண்டாம் தேதி நடைபெறும். 

 

Share via