முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் இறுதிகட்ட பரப்புரை .

by Editor / 16-04-2024 08:31:17am
 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் இறுதிகட்ட பரப்புரை .

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இறுதிகட்ட பரப்புரை மேற்கொள்கிறார். வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்தும் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். அதே போல், திமுக பிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் பல்வேறு தொகுதிகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

Tags : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் இறுதிகட்ட பரப்புரை .

Share via