ராகுல் காந்திக்கு திடீர் உடல்நல குறைவு

by Staff / 21-04-2024 03:51:29pm
ராகுல் காந்திக்கு திடீர் உடல்நல குறைவு

ராகுல் காந்தி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார். தற்போது அவர் டெல்லியில் ஓய்வெடுத்து வருகிறார். இதனிடையே இன்று மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பங்கேற்கவில்லை. ராகுலுக்கு பதிலாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சத்னா மற்றும் ராஞ்சி கூட்டங்களில் பங்கேற்பார்கள். ராகுல் உடல்நிலை சரியானதையடுத்து அடுத்து மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் பரங்கற்பார் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via