போலி பதிவு எண்ணை வைத்து 8 டன் கனிமவள கடத்திய கேரளா லாரி பறிமுதல்-ஓட்டுநர் கைது. 

by Editor / 23-04-2024 12:57:20am
போலி பதிவு எண்ணை வைத்து 8 டன் கனிமவள கடத்திய கேரளா லாரி பறிமுதல்-ஓட்டுநர் கைது. 

கேரள மாநிலம் கொட்டாரக்கரை முகலூவிழா டேனியல் மகன் ரெஜு இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து கேரள மாநிலம் அஞ்சல் பகுதிக்கு கே எல் 25 க்யூ 8822 என்கின்ற டிப்பர் லாரியில் கனிம வளம் ஏற்றிக் கொண்டு இன்று22.04.2024  காலை செங்கோட்டை அடுத்துள்ள புளியரை காவல்துறை சோதனைச் சாவடியில் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக போலீசார் விரட்டிச் சென்று அந்த லாரியை பிடித்து ஓட்டுனர் ரெஜியிடம் விசாரணை நடத்தவே அந்த லாரி அளவுக்கு அதிகமாக எட்டு டன் ஜல்லி  எடை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் சென்றதும் கண்டறியப்பட்டது. மேலும் லாரியின் வாகன பதிவு எண் முன் பகுதியில் கே எல் 25 க்யூ 88 22 என போலியாக நம்பர் பிளேட் வைத்து உண்மையான நம்பர் ஆன கே எல் 25 q 5891 மறைத்து போலியான நம்பர் பிளேட்டை தயார் செய்து வைத்து அதில் போலியாக இதற்கு முன் சென்ற லாரியின் பதிவு எண்ணை வைத்து அதனுடைய ஜல்லி கற்கள் ஏத்தி செல்லும் ட்ரான்சிட் பாஸ் தாயார் செய்து  கொண்டு சென்றது தெரிய வரவே போலியாக வாகன பதிவு என்னும் போலியாக ட்ரான்ஸ்சீட் பாஸ் உள்ளிட்டவைகளை வைத்து அதிக அளவில் ஜல்லிக்கற்களை ஏற்றி சென்ற இந்த லாரியை பிடித்து போலீசார் புளியரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன்,உதவி ஆய்வாளர் தீபன் குமார் ஆகியோர் நடத்திய விசாரணையில் போலியான வாகன பதிவு எண் மற்றும் போலியான ட்ரான்ஸ்சிட் பாஸ் உள்ளிட்டவைகளை தயார் செய்து அளவுக்கு அதிகமாக ஜல்லிக்கற்களை  சென்றது கண்டறியப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுநர் ரெஜி கைது செய்யப்பட்டார், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் புலியறை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது அனைத்து வாகனங்களையும் பதிவு எண்களையும் முறையாக காவல் துறையினர் சோதனை நடத்தி வாகனங்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

 

Tags : போலி பதிவு எண்ணை வைத்து 8 டன் கனிமவள கடத்திய கேரளா லாரி பறிமுதல்-ஓட்டுநர் கைது. 

Share via