மசூதிக்குள் புகுந்து மதகுரு குத்திக் கொலை

by Staff / 28-04-2024 03:59:22pm
மசூதிக்குள் புகுந்து மதகுரு குத்திக் கொலை

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் காஞ்சன் நகரில் உள்ள முகமதி மதீனா மசூதியின் மதகுரு முகமது மாஹிர் (30). உத்தரபிரதேசத்தின் ராம்பூரை சேர்ந்த இவருடன் மசூதியில் சில சிறுவர்களும் மசூதியில் வசித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மசூதிக்குள் முகமூடி அணிந்தபடி நுழைந்த 3 மர்ம நபர்கள், முகமது மாஹிரை குத்திக் கொலை செய்தனர். மசூதிக்குள் இருந்த 6 சிறுவர்களை, சத்தம் போடக்கூடாது என மிரட்டிய மர்ம நபர்கள், மாஹிரைக் கொலைச் செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

 

Tags :

Share via