கள்ளம்புலி கிராமத்தில் சுவாமி சிலைகள் சேதம் சிசிடிவி காட்சி வெளியானது

by Staff / 10-05-2024 04:24:39pm
கள்ளம்புலி கிராமத்தில் சுவாமி சிலைகள் சேதம் சிசிடிவி காட்சி வெளியானது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் கள்ளம்புலி கிராமத்தில் இந்து ஆலயங்கள்
 இந்து விக்கிரகங்கள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுகிறது என்ன பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் சென்ற மாதம் பட்டியல் இனத்தோர் கள்ளம்புளி ஊருக்கு மேல் பகுதியில் குளத்து கரையில் உள்ள மாடசாமி  ஆலயத்திலும் விக்ரகம் சேதம் படுத்தப்பட்டுள்ளது  பொருள்களும் களவாடப்பட்டுள்ளது   இன்று அதிகாலை சேர்ந்த மரம் அருகில் உள்ள
 கள்ளம்புலி கிராமத்தில் அமைந்துள்ள தெப்பத்து மாடசாமி கோவில்  சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. அது குறித்து சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன ஆலயத்திற்கு வரும் நபர் கையில் கம்பு போன்று ஒரு பொருளை வைத்து பத்து ஐந்து 2024 அதிகாலை 2.41 மணியளவில் ஆலயத்தின் உடைய சிலைகளை சேதப்படுத்தும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன மேலும் சிசிடிவி கேமரா இருப்பது தெரியாமல் நபர் ஆடைகளை மாற்றும் காட்சிகளும் வெளியாகி உள்ளன இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் இது குறித்து சேர்ந்த மரம் காவல் நிலையத்தில் ஆலய நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர்ந்தமரம் போலீசார் ஆலயத்தின் உடைய சுவாமி சிலைகளை சேதப்படுத்திய நபரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via