இபிஎஸ் , சீமானுக்கு அமைச்சர் ம.சுப்பிரமணியன் சவால்

by Staff / 09-12-2023 02:21:04pm
இபிஎஸ் , சீமானுக்கு  அமைச்சர் ம.சுப்பிரமணியன் சவால்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கிய ₹4,000 கோடி என்ன ஆனது எனக் கேட்கும் இபிஎஸ், சீமான் ஆகியோர், அதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என அமைச்சர் சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுதொடர்பாக பேசிய அவர்; சென்னை பெருவெள்ள பாதிப்புகளை அரசியலாக்க கூடாது என கோரிக்கை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளை அறிக்கை கேட்பவர்களை நேரடியாக கூட்டிச்சென்று தண்ணீர் எதனால் தேங்கியது என நிரூபிக்க தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via