டெல்டா பிளஸ் வகை கொரோனா: உண்மை நிலை என்ன?- WHO விளக்கம்

by Editor / 24-07-2021 08:34:27pm
டெல்டா பிளஸ் வகை கொரோனா: உண்மை நிலை என்ன?- WHO விளக்கம்


உலக அளவில் பல நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவலில் அதிக தாக்கம் ஏற்படுத்தி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வகை என்பது இன்னும் அஞ்சப்படும் அளவுக்கு அச்சுறுத்தலாக மாறவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானியான மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திய கொரோனா வகை தான் ‘டெல்டா’ வைரஸ்.


அந்த வகை மேலும் உருமாற்றம் அடைந்து ‘டெல்டா பிளஸ்’ என அழைக்கப்பட்டது. இந்தியாவில் தான் இந்த வகை கொரோனா தொற்று முதலில் பரவத் தொடங்கியுள்ளது. முன்னர் இருந்த கொரோனாவை விட இது இன்னும் வீரியமாக பரவும் என்றும், அதிக பாதிப்புகளை உருவாக்கும் என்று பல தரப்பினரால் எச்சரிக்கப்பட்டு வருகிறது. 


இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 12 மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல உலகளவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று 12 நாடுகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via