2. 75 கோடி மோசடி- மலையாள பட தயாரிப்பாளர் கைது
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஜானி தாமஸ் (65). மலையாள சினிமா பட தயாரிப்பாளர். இவர் மீது கோவை வடவள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் துவாரக் உதய சங்கர் என்பவர் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசார் ஜானி தாமஸ், அவருடைய மகன் ரான் ஜானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர்.இந்த நிலையில், ஜானி தாமஸ் நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்பி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதை அறிந்த கொச்சி போலீசார் ஜானி தாமசை நெடும்பாசேரி விமான நிலையத்தில் பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று ஜானி தாமசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :