உணவு பொருட்கள் தயாரிப்பு-விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

by Admin / 11-08-2021 02:26:12pm
உணவு பொருட்கள் தயாரிப்பு-விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

 

உணவுப்பொட்டலங்களில் உரிய விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டும் பொதுமக்கள் வாங்கிப்பயன்படுத்த வேண்டும்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர்விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புக் குழு அலுவலர்கள் குண்டடம், வஞ்சிபாளையம் பிரிவு, கொடுவாய், பொங்கலூர் தேவனம்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பொங்கலூர்பகுதியில் செயல்படும் காரவகைகள் தயாரிப்பு நிறுவனத்தில் உணவுப் பொருள்களின் தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாத நிலையில் சுமார் 97 கிலோ காரவகைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர்விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-
 
மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவு விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத் தரச்சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன் படி உணவுப் பொருள் பொட்டலங்கள் உரிய விவரங்களுடன் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவுப்பொட்டலங்களில் உரிய விபரங்கள் குறிப்பிடப்பட்ட உணவுப்பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

கலப்படம் மற்றும் உணவுத்தரம் தொடர்பான புகார்களுக்கு 94440-42322 என்ற செல்போன்எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

 

 

Tags :

Share via